சங்கீதம் 150 – Psalms Chapter 150

Psalms Chapter 150

சங்கீதம் அதிகாரம் 150

1. அல்லேலுூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

2. அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

3. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

6. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலுூயா.)

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =