சங்கீதம் 146 – Psalms Chapter 146

Psalms Chapter 146

சங்கீதம் அதிகாரம் 146

1. அல்லேலுூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.

2. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

3. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.

4. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

5. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

6. அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

7. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.

8. குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

9. பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

10. கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலுூயா.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 9 =