1 நாளாகமம் 25 – 1 Chronicles Chapter 25

1 Chronicles Chapter 25

1 நாளாகமம் அதிகாரம் 25

1. மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

2. ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

3. கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

4. கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின் குமாரரான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.

5. இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

6. இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

7. கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.

8. அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

9. முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

10. மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,

11. நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,

12. ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

13. ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

14. ஏழாவது எசரேலோ, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர்வழிக்கும்,

15. எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

16. ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரர் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

17. பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

18. பதினோராவது அசாரியேல், அவன்குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

19. பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

20. பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

21. பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

22. பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

23. பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

24. பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

25. பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

26. பத்தொன்பதாவது, மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

27. இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

28. இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

29. இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

30. இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

31. இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =